Saturday, 26 September 2015

3000 திரையரங்குகளில் வெளியாகிறது 'புலி'



அக்டோபர் 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளையும் சேர்த்து சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகிறது 'புலி'சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் 'புலி'.



ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதி இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முன்பதிவு தொடங்கியிருக்கும் சமயத்தில் படக்குழுவிடம் விசாரித்த போது, நாங்களே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'புலி'. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 3000 திரையரங்குகளில் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்றார்கள்.
மேலும், இப்படத்துக்கான முன்பதிவில் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அக்டோபர் 8-ம் தேதி வரை டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment