Saturday, 26 September 2015

'மாயா'வுக்கு ஹாலிவுட் இயக்குநர் பாராட்டு







நயன்தாரா நடித்திருக்கும் 'மாயா' படத்துக்கு ஹாலிவுட் இயக்குநர் எரிக் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி, அம்ஸத் கான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மாயா'. யோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.







இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்திருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் எரிக், 'மாயா' குழுவினருக்கு தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எரிக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சமீபத்தில் ’மாயா’ என்ற படத்தை பார்த்தேன். அழகான, உயிரோட்டமான திரைப்படம். அதில் நடித்திருந்தவர்கள், அற்புதமான ஒளிப்பதிவு, அட்டகாசமான இசை மற்றும் சப்தங்கள் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டன. தென்னிந்தியாவிலிருந்து வரும் படங்கள் பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாது என்றாலோ, புதுவகையான படத்தை பார்க்க நினைத்தாலோ இந்தப் படத்தைப் பார்த்து ரசியுங்கள். கதை சொன்ன விதத்திலும் படமாக்கப்பட்ட விதத்திலும் இந்தப் படம் தனித்தன்மை வாய்ந்த அனுபவமாக இருக்கும். தற்போது திரையங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.

ஹாலிவுட் அளவில் தங்களது படத்துக்குப் பாராட்டு கிடைத்திருப்பதில் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறது 'மாயா' படக்குழு.

No comments:

Post a Comment