இந்தியத் திரையுலகில் யாருக்கும் இன்னமும் மிகத் துல்லியமாக அகப்படாத திரை மொழியை கைக் கொண்ட படம்.உலகெங்கும் திரைப்படங்கள் வன்முறையை புகழாரம் செய்து, கிளர்ச்சி யூட்டும் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், வன்முறையை அன்பிற்காகவும், கருணைக்காகவும் மனித இன மேம்பாட்டிற்காகவும் கையாண்டிருக்கும் தனித்துவமான படம்.குரோதம், பழிக்கு பழி, வன்மம் இவையே வணிகத் திரைப்படத்தின் தந்திரமாக இருக்கும் நிலையில் “நான் உயிரோட இருக்கறதுக்கு, உங்கள சுடனுமா வேண்டாம் ஐயா....” என்ற வசனத்தை முன் வைக்கும் படம்.. சொல்லப்போனால் இதுவே இப்படத்தின் எளிமையான மையச் சரடும் கூட..உண்மையை உரத்துச் சொல்லுதலே கலை என்பதை நம்புவதாலும், அந்த நம்பிக்கைத் தந்த திரை மொழியைக் கையாண்டதாலும் ஒரு முழுமையான படம்...
நடிப்பு, பின்னனி சப்தம், ஒளிப்பதிவு, திரைக்கதை, என நிறைய பேச இருக்கிறது...படம் வெளி வரும் வரை காத்திருக்கிறேன் இன்னமும் சொல்ல…
No comments:
Post a Comment