‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் உருவாகிறது.
இப்படம் எடை குறைப்பு பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும், அதற்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து முதலில் இப்படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர். அன்றைய தினத்தில் விஜய்யின் புலி படம் வெளியாவதால், அக்டோபர் 9ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment