Saturday, 26 September 2015

நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது







கார்த்தியும் நாகார்ஜூனாவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெயர் வைக்காமலேயே இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.




படத்துக்கு நிறைய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியாக படத்துக்கு ‘தோஸ்த்’ என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இப்படத்திற்கு ‘தோழா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெலுங்கில் ‘ஓபிரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். வம்சி பைடிபல்லி இப்படத்தை இயக்கி வருகிறார்.

No comments:

Post a Comment